ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலக பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது.
ஈரோடு,
ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலக பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது.
தபால் நிலையம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் சென்று வந்த இடங்கள் கண்டறியப்பட்டு அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அந்த நபர் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்புவதற்காக சென்று வந்ததும் தெரிய வந்தது.
கொரோனா பரிசோதனை
அதனால் தபால் நிலையத்தில் கவுண்டர் பிரிவில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் தபால் அலுவலக கவுண்டரில் பணியாற்றிய 32 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் நேற்று முன்தினம் மாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் பணியாற்றும் 150 பேருக்கு, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு யார் யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story