முழு ஊரடங்கின்போது யார் - யாருக்கு அனுமதி அதிகாரி தகவல்
முழு ஊரடங்கின்போது யார் - யாருக்கு அனுமதி என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் முதல் இரவு
வரை என்னென்ன பணிகளுக்கு விதிவிலக்கு உண்டு, யார்-யார் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது பற்றி அதிகாரி ஒருவர்
கூறியதாவது:-
* கோவையில் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும்,
* மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பால் பூத்கள் திறந்திருக்கும்.
* பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் திறந்திருக்கும். ஆனால் ஆம்புலன்ஸ், போலீஸ், அரசு வாகனங்களை தவிர மற்ற
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. எரிபொருள் போடப்படும் அரசு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் பதிவு
எண்கள் மற்றும் விவரங்கள் பதிவு செய்த பின்னர் தான் எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முகக்கவசம்
* பொதுமக்கள் நடந்தோ, வாகனங்களிலோ வெளியே செல்லக்கூடாது. ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் தடை செய்யப்பட மாட்டார்கள்.
மருந்து வாங்க வந்தோம் என்று கூறி வெளியே வருபவர்கள் அதற்கான மருந்து சீட்டு வைத்திருக்க வேண்டும். வெளியே
வரும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி பணிக்காக செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வருவாய்த் துறை, துப்புரவு பணியாளர்கள்
உள்பட அத்தியாவசிய துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் செல்வதற்கு எந்த தடையும் கிடையாது.
வாகனங்கள் இயங்காது
* பஸ் போக்குவரத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல லாரி, கார், வேன் போன்ற வாகனங்கள் இயங்க அனுமதி
கிடையாது.
* டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
* தனியார் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கிடையாது. அந்த தொழிற்சாலைகளில் இரவு பணி முடிந்து அதிகாலை அல்லது
காலை 6 மணிக்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு சிறிதுநேரம் அவகாசம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story