விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 962 ஆக உயர்வு


விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 962 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 July 2020 2:43 AM GMT (Updated: 5 July 2020 2:43 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுஒரேநாளில்மட்டும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் விருதுநகர் சூலக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்த 50 வயது பெண், 60 வயது நபர், பாண்டியன்நகரை சேர்ந்த 42, 47 வயது பெண்கள், செந்தில் விநாயகபுரம் நகரை சேர்ந்த 65 வயது முதியவர், வ.உ.சி. நகரை சேர்ந்த 1½ வயது குழந்தை.

சூலக்கரைமேட்டை சேர்ந்த 31 வயது பெண், அவரது 14 நாள் குழந்தை, பரங்கிரிநாதபுரம் தெருவை சேர்ந்த 61 வயது முதியவர், மோகன்ராஜேஸ்காலனியை சேர்ந்த 44 வயது நபர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 37 வயது நபர், கீழக்கடைதெருவை சேர்ந்த 61 வயது நபர், விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி

சிவகாசி சீதக்காதி நடுதெருவை சேர்ந்த 64 வயது முதியவர், 28 வயது நபர், 54 வயது நபர், 57 வயது பெண், அருப்புக்கோட்டையை சேர்ந்த 22 பேர், மடத்துப்பட்டியை சேர்ந்த 4 பேர், செட்டிக்குறிச்சி, திருச்சுழி, பாலையம்பட்டி, ஏ.முக்குளம், தளவாய்புரம், மறையனூர், செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, பெரியபேராலி, கூரைக்குண்டு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 962 - ஆக உயர்ந்துள்ளது. நேற்று விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதியிலும் கிராமப்புறங்களிலும் பரவலாக பாதிப்பு உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story