சிவகங்கையில் 61 பேருக்கு கொரோனா 2 பேர் பலி


சிவகங்கையில் 61 பேருக்கு கொரோனா   2 பேர் பலி
x
தினத்தந்தி 5 July 2020 3:54 AM GMT (Updated: 2020-07-05T09:24:14+05:30)

சிவகங்கையில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று காரைக்குடியை சேர்ந்த 4 ஆண்கள், 7 பெண்கள், புதுக்கோட்டையில் ஒரு பெண், திருப்பத்தூரில் 2 பெண், ஒரு ஆண், காரைக்குடியில் ஒரு ஆண், தேவகோட்டையில் 2 ஆண்கள், 6 பெண்கள், திருமாஞ்சோலையில் ஒரு பெண், சிவகங்கையில் 2 ஆண்கள், 4 பெண்கள், தேவிபட்டினத்தில் ஒரு ஆண், இளையான்குடியில் 3 ஆண், ஒரு பெண், திருப்புவனத்தில் ஒரு ஆண், காளையார் கோவிலில் 3 பெண்கள், புளியங்குளத்தில் ஒரு பெண், பரமக்குடியில் ஒரு ஆண், ஒரு பெண், பச்சேரியை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரையை சேர்ந்த 3 பெண்கள், குளத்துபட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒக்கூரை சேர்ந்த ஒரு பெண், திருவெற்றியூரை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காமராஜர்புரத்தை சேர்ந்த ஒரு பெண், நாட்டரசன் கோட்டையை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், மறவமங்கலத்தில் ஒரு ஆண், சாலைகிராமத்தில் ஒரு ஆண், ஒரு பெண், மரிச்சுகட்டியில் ஒரு பெண் உள்பட 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 பேர் பலி

இந்தநிலையில் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காரைக்குடியை சேர்ந்த 63 வயது ஆண் ஒருவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story