பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2020 10:23 AM IST (Updated: 5 July 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குத்தாலம், 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் அன்பழகன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துசாமிநாதன், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வராஜ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கனிமொழி, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். இதேபோல் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து குத்தாலம் கடைவீதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் சூர்யா, வட்டார தலைவர்கள் பரதன், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story