திருமணி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவர் இடிந்தது
திருமணி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் திருமணியை அடுத்த மோசிவாக்கம் பகுதியில் இருந்து திருக்கழுக்குன்றம் சாலைக்கு செல்வதற்காக அந்த பகுதி மக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு சுரங்கப்பாதை அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கபட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் திடீரென மழையின் காரணமாக சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர் இடிந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். பொதுமக்கள் அந்த வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story