கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு
கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த சேத்தூர் போலீஸ் ஏட்டு திடீரென இறந்தார்.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் அய்யனார் (வயது 40). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் ராஜபாளையம் கலங்கா பேரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2-ந் தேதி காய்ச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. உடனே இவரை சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது அவருக்கு கொரோனா உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருமி நாசினி தெளிப்பு
சேத்தூர் போலீஸ் நிலையத்தில் தற்போது 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சேத்தூர் புறநகர் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னதாக போலீஸ் ஏட்டு அய்யனார் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story