நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
நெல்லை,
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகை
பாளையங்கோட்டையில் நேற்று நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிறுவன தலைவர் மகராஜன் தலைமையில் அந்த அமைப்பினர் திரண்டனர். அவர்கள் கொடிகளை ஏந்தி ஊர்வலகமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட வந்தனர். அங்கு போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-
நாங்குநேரி தாலுகா பத்மநேரியை சேர்ந்த மருது என்ற மருதுபாண்டி (வயது 25) எங்கள் அமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி போலீசார் மருதுபாண்டியை அழைத்துச் சென்று கொடுமையாக தாக்கி உள்ளனர். இதே போல் நாங்குநேரி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் (28) என்பவர் மீது கடந்த மே மாதம் போலீசார் பொய்யான திருட்டு வழக்குப்பதிவு செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதை தடுத்து நிறுத்துவதோடு, பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அதில், திசையன்விளை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பொது மக்கள் மீது சாதி ரீதியாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார். அவர் ஒரு வாலிபரை தாக்கி உள்ளது சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது. எனவே சப்-இன்ஸ்பெக்டர், அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story