இன்னும் 6 மாதங்கள் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் பேச்சு


இன்னும் 6 மாதங்கள் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் பேச்சு
x
தினத்தந்தி 7 July 2020 4:00 AM IST (Updated: 7 July 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

இன்னும் 6 மாதங்கள் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்று மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு,

இன்னும் 6 மாதங்கள் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்று மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

அதிக பிரச்சினைகள்

கொரோனா தடுப்பு தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் கவுதம்குமார், கமிஷனர் அனில்குமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மந்திரி ஆர்.அசோக் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனாவை தடுக்க வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் அதிக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கொரோனாவை கண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுபற்றிய செய்திகள் அதிகமாக வெளியாவதும் பீதிக்கு ஒரு காரணமாக இருக்கிறதோ என்னவோ.

தரமான உணவு

மக்கள் பிரதிநிதிகள் வீட்டில் உட்கார்ந்திருக்க முடியாது. மக்கள் வரிை-யில் நின்று ஓட்டு போட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதியாக நாம் நமது கடமையை செய்ய வேண்டியது அவசியம். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு சரியில்லை என்று புகார்கள் வந்தன. நான் நேரில் சென்று அதை சரி செய்தேன். தற்போது நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது.

இத்தகைய நெருக்கடியான நேரத்தில் அதிகாரிகள் மற்றும் டாக்டர்களை குறை சொல்ல முடியாது. அவர்களின் கஷ்டங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் 6 மாதங்கள் கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.

கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் ஒவ்வொரு வார்டிலும் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடுகிறவர்களின் உடல்நலனும் முக்கியம். எந்த ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இருக்கிறது என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும். பெங்களூருவில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் பேசினார்.

Next Story