கோவை மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 802 ஆக அதிகரிப்பு


கோவை மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி   பாதிப்பு எண்ணிக்கை 802 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 July 2020 11:05 PM GMT (Updated: 6 July 2020 11:05 PM GMT)

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பெண்கள் உள்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 802 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை, 

கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டு அருகிலுள்ள குடியிருப்புகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை செல்வபுரம் அய்யப்பா நகரில் உள்ள ஒரு நகை பட்டறையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் கோவை, உக்கடம் போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றிய அலுவலர், பி.ஆர்.எஸ். குடியிருப்பை சேர்ந்த 29 வயது இளைஞர், தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 27 வயது பெண் பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்காநல்லூர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த 38 வயது ஆண், ரத்தினபுரியை சேர்ந்த 63 வயது முதியவர், 52 மற்றும் 25 வயது பெண்கள், உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த 52 வயது பெண், செல்வபுரம் திருநகரை சேர்ந்த 63 வயது முதியவர் ஆகிய 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு வந்தவர்கள்

மேலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பீளமேடு பி.ஆர்.புரத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், சின்னியம்பாளையத்தை சேர்ந்த 37 வயது ஆண், வீரபாண்டியை சேர்ந்த 24 வயது பெண், கணபதியை சேர்ந்த 39 வயது ஆண், ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த 25 வயது பெண், சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயது பெண், தொண்டாமுத்தூர் அபிநவ் குடியிருப்பை சேர்ந்த 27 வயது இளைஞர், சூலூர் பாரதி நகரை சேர்ந்த 25 வயது பெண், பொள்ளாச்சியை சேர்ந்த 38 வயது ஆண், டவுன்ஹால் இடையர் வீதியை சேர்ந்த 27 வயது இளைஞர், சாய்பாபா காலனியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

பாதிப்பு 802 ஆக அதிகரிப்பு

கோவை கே.கே.புதூரை சேர்ந்த 39 வயது பெண், பொள்ளாச்சியை சேர்ந்த 23 வயது இளைஞர், கே.ஜி.வீதியை சேர்ந்த 34 வயது ஆண், நாடார் வீதியை சேர்ந்த 40 வயது பெண், வெள்ளலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த 63 வயது முதியவர், வடவள்ளி ஐஸ்வர்யா நகரை சேர்ந்த 20, 45 வயது பெண்கள், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 58 வயது ஆண், சிங்காநல்லூரை சேர்ந்த 38 வயது ஆண், கணபதி மாநகரை சேர்ந்த 48 வயது ஆண், 69 வயது மூதாட்டி, ஒண்டிப்புதூரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, கருமத்தம்பட்டியை சேர்ந்த 28 வயது இளைஞர், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவைமாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 51 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கோவைமாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.

Next Story