வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு பெண் உள்பட 6 பேர் பலி ஒரே நாளில் பரிதாபம்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர்,
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதியவர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியான நபர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 24 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் சைதாப்பேட்டை சார்பனாமேட்டு தெருவை சேர்ந்தவர் கலீல்கான் (வயது 72). இவர், கடந்த 4-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று வேலூர் தாலுகா மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவரது மனைவி பபினாவிற்கு (45) கடந்த 4-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதையடுத்து அவர் சி.எம்.சி. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காட்பாடி முதியவர்
காட்பாடி பகுதியை சேர்ந்த 78 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த 2-ந்தேதி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுகுறித்து 3 பேரின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கொரோனாவினால் பலியான 3 பேரின் உடல்களும் அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை சமுத்திரம் காலனியை சேர்ந்த 64 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஈசான்ய லிங்கம் அருகே உள்ள நகராட்சி மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல திருவண்ணாமலை போளூர் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் 65 வயது முதியவர். இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 3-ந்தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பாதுகாக்கப்பட்ட முறையில் எரியூட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர்
இதேபோல திருப்பத்தூரில் நேற்று கொரோனா தொற்றுக்கு அர்ச்சகர் ஒருவர் பலியானார்.
Related Tags :
Next Story