கொரோனா தொற்றுக்கு ஊழியர் பலி: தொழிற்சாலையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒழையூர் கிராமத்தில் தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒழையூர் கிராமத்தில் தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சக ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்கு கொரோனா தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் திடீரென தொழிற்சாலையை முற்றுகையிட்டு, நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி, பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story