கொரோனா வைரஸ் பரவலை தடுக்க “தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள்” பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.
வாகன சோதனை
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தினர்.
வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள்
அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அதையும் மீறி வெளியே வந்தால் உங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மூலம் உங்கள் குடும்பத்தினருக்கும் பரவும். எனவே தயவுசெய்து தேவையில்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். ஒரு வாரத்துக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி, இருப்பு வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்களும், உங்களது குடும்பமும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார். பின்னர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சோதனையின்போது கள்ளகுறிச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story