மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2020 9:54 AM IST (Updated: 7 July 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு மாதர்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொலையாளிகளை கண்டித்தும் அந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரியும், பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு மாதர்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க தாலுகா தலைவர் வெங்கடேசுவரி, தாலுகா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா, பொருளாளர் சுமதி மற்றும் நிர்வாகிகள் பாண்டிச்செல்வி, மோட்சராக்கினி, ராதா, வில்லியம்ஜாய்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரியம்மாள், கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சிவா, நிர்வாகிகள் கருணாகரன், அசோக், கருணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story