தடையை மீறி ஆர்ப்பாட்டம் பகுஜன் சமாஜ் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு


தடையை மீறி ஆர்ப்பாட்டம்  பகுஜன் சமாஜ் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 July 2020 11:20 AM IST (Updated: 7 July 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பகுஜன் சமாஜ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம், 

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் வழக்கில் நீதி கேட்டு கொலைக்கு காரணமானவர்களை விடுவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் ராஜவேல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் காமராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் இளங்கோவன், பொது செயலாளர் சபரி ஆனந்தன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

முடிவில் தா.பழூர் ஒன்றிய தலைவர் பாலு நன்றி கூறினார். இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி கோரியிருந்தனர். 144 தடை உத்தரவு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை உள்பட பகுஜன் சமாஜ் கட்சியினர் 30 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story