மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு போராட்டம்


மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2020 6:00 AM IST (Updated: 8 July 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சியில் மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேலே அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி போடி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் உள்ள கண்ணக்கரை பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மருதையனூர், சொக்கன்அலை, பட்டூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணக் கரை முதல் மருதையனூர் வரை சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனை கண்டித்து மலை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணக் கரை பகுதிக்கு வந்து ரேஷன்கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை கையில் ஏந்தி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு மாத காலத்திற்குள் சாலை அமைக்கும் பணியை தொடங்காவிட்டால் அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story