சேலத்தில் போட்டித்தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் மூலம் நடத்த ஏற்பாடு: கலெக்டர் ராமன் தகவல்


சேலத்தில் போட்டித்தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் மூலம் நடத்த ஏற்பாடு: கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 1:47 AM GMT (Updated: 8 July 2020 1:47 AM GMT)

விழிப்புணர்வு வாரத்தையொட்டி போட்டித்தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்,

சேலம், 

சேலத்தில் திறன் விழிப்புணர்வு வாரத்தையொட்டி போட்டித்தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்புகள், பணி வாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரம் ஜூலை மாதம் 2-வது வாரம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ‘’We-b-i-n-ar’ என்ற இணையம் மூலம் நடத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி இன்று (புதன்கிழமை) “ Webinar ‘ மூலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வி, போட்டித்தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) சேலம் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘ ‘We-b-i-n-ar’ மூலம் திறன் பயிற்சி குறித்த விழிப்புணார்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 10-ந் தேதி அன்று செந்தில் பப்ளிக் பள்ளியில் பயிலும் 10-ம், 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ‘We-b-i-n-ar’ மூலம் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி அன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 14-ந் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்கு, தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகர் கற்றல் வலைதளம் மற்றும் வேலை தேடுபவர்களுக்காக தற்போது தொடங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலை இணையம் பற்றிய தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

மேலும், தேசிய திறன் நாளான வருகிற 15-ந் தேதி திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ‘We-b-i-n-ar’ மூலம் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்புகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு இணையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், www.tnsk-i-ll.gov.in என்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அந்த இணைய தளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story