குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் தனித்தனியாக கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டவும், மலை கிராமங்களில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைவில் முடிக்கவும், பொதுமக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கவும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் களை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதிகாரிகள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ரேவதி, அரசு ரப்பர் கழக பொதுச் செயலாளர் அசோக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், சப்- கலெக்டர் ரிஷாப், கோட்டாட்சியர் மயில் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், தேசிய நெடுஞ்சாலைத் துறை உள்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story