கோவையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை,
கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி கோவை மாநகராட்சி மற்றும் புறநகரில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில், கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப் பட்ட சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், மணியம் வேலப்பர் வீதி, காளியப்பன் வீதி ஆகிய பகுதிகளில் நேற்று கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும் மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் அந்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவர்களை தொடர்ந்து கண்காணித்திட வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களை கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story