ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 July 2020 12:12 AM GMT (Updated: 9 July 2020 12:12 AM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர், 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நேற்று வரை ஊரடங்கு காலத்தில் சைல்டுலைன் அலுவலகத்துக்கு வந்த அழைப்பின்பேரில் 61 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதைத்தவிர 17 சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் தகவல்கள் கிடைத்தன. அந்த திருமணம் செய்து வைத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சமூக நலத்துறை அலுவலர்கள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 65 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சிறுமிகள் திருமணம் நடைபெறுவது குறித்து தெரிய வந்தால் உடனடியாக 1098 அல்லது 181 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story