ஆண்டிப்பட்டி நகரில் முழுஊரடங்கால் கடைகள் அடைப்பு வீதிகள் வெறிச்சோடின


ஆண்டிப்பட்டி நகரில்   முழுஊரடங்கால் கடைகள் அடைப்பு வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 9 July 2020 5:58 AM IST (Updated: 9 July 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி நகரில் முழுஊரடங்கால் மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒருபகுதியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆண்டிப்பட்டி நகரில் நேற்று முதல் வருகிற 17-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆண்டிப்பட்டி நகரில் மருந்து கடைகள் தவிர்த்து நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி நகரில் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. சாலைகள் போக்குவரத்தின்றி காணப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் களை டோர் டெலிவரி செய்யவும், மக்கள் இருப்பிடத்திற்கே சென்று வாகனங்களில் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தில் மிகவும் அவசியமின்றி வெளியே வரும் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்த 10 நாள் முழுஊரடங்கின்போது ஆண்டிப்பட்டி நகரில் கொரோனா பாதிப்பு கட்டுக் குள் வராவிட்டால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story