திருப்பரங்குன்றம் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை; பாலம் மூடப்பட்டது கொரோனா பரவலை தடுக்க


திருப்பரங்குன்றம் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை; பாலம் மூடப்பட்டது கொரோனா பரவலை தடுக்க
x
தினத்தந்தி 9 July 2020 7:05 AM IST (Updated: 9 July 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், 

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையொட்டி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் மதுரை சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். அதில் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்களுக்கு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் திருப்பரங்குன்றம் நகருக்குள் வெளியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி நகரின் நுழைவுவாயிலான பாலம் மூடப்பட்டுள்ளது. திருநகர், ஹார்விபட்டி பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கும், முக கவசம் அணியாதவர்களுக்கும் மாநகராட்சி மற்றும் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

Next Story