கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர்,
திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோட்டை அடுத்த கொல்லம்பட்டியை சேர்ந்த கார்த்திகா (வயது 30) என்பவருக்கும், கரூர் தாந்தோணிமலை முத்தாலம்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த சுப்பிரமணி (34) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கவுசிகாஸ்ரீ (6) என்ற மகள் உள்ளாள். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா, மகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சுப்பிரமணியன் குடும்பத்தினர் சென்று அழைத்தும் கார்த்திகா வரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று கொல்லம்பட்டியில் இருந்து முத்தாலம்பட்டியில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு மகள் கவுசிகாஸ்ரீயுடன் கார்த்திகா வந்துள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் கார்த்திகா தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும், வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி வீட்டின் முன்பு தனது மகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கார்த்திகா, சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story