தாராவியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா
தாராவியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
மும்பை,
தாராவியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
9 பேருக்கு பாதிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று அங்கு புதிதாக 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 347 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 1,815 பேர் குணமடைந்து உள்ளனர்.
இதுவரை 86 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடு, வீடாக சோதனை
தாராவியில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து விடக்கூடாது என்பதில் மாநகராட்சி கவனமாக உள்ளது. இதனால் சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று யாருக்கேனும் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறன்றனர்.
இதேபோல நேற்று தாதரில் 23 பேருக்கும், மாகிமில் 17 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை முறையே 1,067, 1,316 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story