நூறு நாள் வேலை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
நூறு நாள் வேலை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
நூறு நாள் வேலை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
விழுப்புரம் அருகே நங்காத்தூர் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏரி, குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் சரிசமமாக வேலை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து அந்த தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story