ஊட்டியில் ரூ.447½ கோடியில் அரசு மருத்துவ கல்லூரி; காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
ஊட்டியில் ரூ.447½ கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை)அடிக்கல் நாட்டுகிறார்.
ஊட்டி,
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 11-வது புதிய மருத்துவ கல்லூரி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதம், தமிழக அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டிட பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் ஊட்டியில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேநேரம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.447½ கோடியில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. இதுகுறித்து ஊட்டி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 25 ஏக்கர் நிலத்தில் மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. மீதமுள்ள 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவ கல்லூரியில் பணிபுரிபவர்கள் தங்க குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
மருத்துவ கல்லூரியில் 21 பிரிவுகள் அமைக்கப்பட்டு 650 படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட இருக்கிறது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, அனிமியா, ரேடியாலஜி, காசநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல், காது-மூக்கு-தொண்டை, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிக்கல், பொது சிகிச்சை, போன்ற பிரிவுகள் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படுகிறது.
மருத்துவ கல்லூரி கட்ட 16 முதல் 18 மாதங்கள் ஆகும். வருகிற 2021-22-ம் ஆண்டில் 150 மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகிறது. இங்கு பணிபுரிய 1,200 பேர் தேவைப்படுவார்கள். அதற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் பொதுப்பணித்துறை மூலம் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெறும். ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைவதன் மூலம் உயர் தர சிகிச்சை மக்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story