கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2020 11:11 AM IST (Updated: 10 July 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் ஒரே நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் மற்றும் ஓமியோபதி மருந்துகளை வழங்க வேண்டும், வத்திராயிருப்பு தாலுகாவில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தையும் பரிசோதனை மையங்களாக செயல்படுத்த வேண்டும்.

வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை ஆகிய மூன்று துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு செய்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை ஆகிய மூன்று துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் அதிக பரிசோதனை மையங்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஓமியோபதி மருந்துகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், திருமலை, ஜோதிலட்சுமி மற்றும் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story