பணியாளர்களுக்கு கொரோனா: இஸ்ரோ மையம் மூடப்பட்டது
காவல்கிணறு இஸ்ரோ மைய பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து, இஸ்ரோ மையம் நேற்று மூடப்பட்டது.
பணகுடி,
காவல்கிணறு இஸ்ரோ மைய பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து, இஸ்ரோ மையம் நேற்று மூடப்பட்டது.
இஸ்ரோ மையம் மூடப்பட்டது
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ என்னும் மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இங்கு பணியாற்றிய உத்தரபிரதேச மாநில என்ஜினீயருக்கு கொரோனா தொற்று பரவியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரோ மையம் கடந்த மாதம் 22-ந் தேதி ஒருநாள் மட்டும் மூடப்பட்டது.
இந்த நிலையில் அங்கு பணியாற்றி வந்த மேலும் சிலருக்கு படிப்படியாக தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ மைய நிர்வாக அதிகாரி சுமா, நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக இஸ்ரோ மையத்தை மூட உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இஸ்ரோ மையம் நேற்று மூடப்பட்டது.
கொரோனா பரிசோதனை
வள்ளியூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இஸ்ரோ மையத்துக்கு சென்றனர். அங்கு தொற்று அறிகுறி ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த பணியாளர்கள் 67 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.
இந்த பணியில் வள்ளியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், மருத்துவர் அமிழ்து, மருத்துவ மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் மருத்துவ குழுவினர் ஈடுபட்டார்கள்.
Related Tags :
Next Story