சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா களக்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது
களக்காட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
களக்காடு,
களக்காட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
போலீஸ் நிலையம் மூடப்பட்டது
நெல்லை மாவட்டம் களக்காட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதியானது.
இதனைதொடர்ந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார பணிகள் தீவிரம்
மேலும் கருத்தான்தெருவை சேர்ந்த 55 வயது தலைமை ஆசிரியர் ஒருவருக்கும், வண்ணார்தெருவை சேர்ந்த 47 வயதுடையவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். களக்காடு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர் வேலு மற்றும் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story