கொரோனாவுக்கு பாதிரியார் பலி
கொரோனாவுக்கு பாதிரியார் ஒருவர் பலியானார்.
சென்னை,
சென்னை முகப்பேர், கோல்டர் ஜார்ஜ் நகரில் உள்ள தூய தமத்திரித்துவ ஆலயத்தின் பாதிரியாராக இருந்தவர் பி.கே.பிரான்சிஸ் சேவியர்(வயது 59). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதிரியார் பிரான்சிஸ் சேவியரின் உடல், பாதுகாப்பான முறையில் சென்னை மயிலாப்பூர் லஸ் தேவாலய வளாகத்தில் உள்ள பாதிரியார்களுக்கான கல்லறை தோட்டத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பாதுகாப்பு கவச உடை அணிந்தபடி நல்லடக்க சடங்கை நடத்தி வைத்தார்.
Related Tags :
Next Story