தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிவாரணம் வீடி தேடி வழங்கப்படும் என கலெக்டர் தகவல்
தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வீடி தேடி சென்று வழங்கப்படும், என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வீடி தேடி சென்று வழங்கப்படும், என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.1000 நிவாரண தொகை
ஊரடங்கால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பயன்பெறும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இதுவரையில் அரசின் உதவித்தொகை பெறாத தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் அனைவருக்கும் ரூ.1000 பெற தகுதியானவர்கள் ஆவர்.
இத்திட்டம் 2-ந்தேதி முதல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அரசிடம் பெறப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், அதன்நகலை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்து நிவாரண தொகை ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம்.
அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
வினியோக உரிய படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும். அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் தனிநபர் சம்பந்தப்பட்ட விவரம், கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, நீல நிற அடையாள அட்டை மற்றும் யு.டி.ஐ.டி. விண்ணப்ப நிலை ஆகியவை ஆகும். நிவாரண தொகை இரு 500 ரூபாய் நோட்டுகளாக பயனாளிகளின் வீட்டுக்கே வந்து வழங்கப்படும். நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்படும்.
நிவாரண தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் செல்போன் எண் 94999 33562 மாநில எண் 18004250111, வாட்ஸ் அப் மற்றும் வீடியோ காலிங் எண் (பேச்சு திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு 97007 99993-ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story