திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வீட்டில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது


திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வீட்டில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது
x
தினத்தந்தி 11 July 2020 2:36 AM GMT (Updated: 11 July 2020 2:36 AM GMT)

திருச்சி ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் நகரில் ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருச்சி,

தனி தாசில்தார்(மேற்கு) ராஜேஷ்கண்ணா தலைமையிலான அதிகாரிகள் நேற்று பகல் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அங்கு மூட்டை, மூட்டையாக 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ரேஷன் அரிசி பதுக்கியதாக அந்த வீட்டில் இருந்த தாஜூனிஷா(வயது 52) என்ற பெண் கைது செய்யப்பட்டார். மூட்டை, மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக இந்த ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story