வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 20 பேரை ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு


வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 20 பேரை ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2020 4:51 AM IST (Updated: 12 July 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 20 பேரை ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லிக்குப்பம், 

வெளிமாவட்டத்தில் இருந்து வந்த 20 பேரை ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர், கரும்பு வெட்டும் வேலைக்காக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர். பின்னர் அங்கு தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் அரசின் அனுமதி பெற்று வேன் மூலம் நேற்று காலை காராமணிக்குப்பத்துக்கு திரும்பினர்.

இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன் மற்றும் அப்பகுதி மக்கள், வெளிமாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 20 பேரையும் ஊருக்குள் வர விடாமல் ஊர் எல்லையில் தடுத்து நிறுத்தினர்.

பரபரப்பு

அப்போது அவர்கள், தாங்கள் உரிய அனுமதி பெற்று தான் வந்துள்ளோம் என்று, அதற்கான அனுமதி கடிதத்தை காண்பித்தனர். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த உங்களுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே ஊருக்குள் வர அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறினர்.

பின்னர் பொதுமக்கள், இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெளிமாவட்டத்தில் இருந்து திரும்பிய 20 பேரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக கடலூருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story