தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிக சிறப்பாக செயல்படுகிறது பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் பேட்டி
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடன் வழங்க உத்தரவு
கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் மத்திய அரசு ஊரடங்கு மற்றும் தளர்வுகள் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு, சமூக பரவல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக பரவிய கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கி உள்ளது.
கொரோனா தொற்றால் மத்திய அரசு சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு இல்லாமல் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை 30 லட்சம் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு விட்டது. மீண்டும் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் மேலும் ரூ.45 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொய் பிரசாரம்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டது எனப் பொய் பிரசாரம் செய்கிறார். தற்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியில் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேசம் என மத்திய அரசு அறிவித்தது. விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு புதிய ஆப் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளைபொருட்களின் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.
41 லட்சம் உறுப்பினர்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. 2024 பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிகபட்ச பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கட்சியில் 41 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர்.
அப்போது மாவட்ட கோட்ட பொறுப்பாளர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் இ.அன்பழகன், பொதுச் செயலாளர்கள் ஆர்.கண்ணன், ஈஸ்வர், மாநில எஸ்.டி. பிரிவு துணைத்தலைவர் ஐ.வி.எல். வி.கோவிந்தராஜன், நகர தலைவர் அருள்மொழி உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story