கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகள்; கலெக்டர் தகவல்


கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகள்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 July 2020 9:11 AM IST (Updated: 12 July 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

கோவை கொடிசி யாவில் 232 பேர் கொரோனாவுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க தனியாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

கோவை,

கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கென்று செயல் பட்டு வரும் பிரத்யேக கண் காணிப்பு மையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் நேற்று கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. அதன்படி, முதற்கட்டமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், அவர்கள் சார்ந்த பகுதிகளில் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரி சோதனை மேற்கொள்ளுதல், தொடர் தொற்றுகள் கண்டறி யப்படும் பகுதிகளை கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து தனிமைப் படுத்துதல் என பல்வேறு தொடர்ச்சியான பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், அறிகுறியின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொடிசியா வளாகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போது 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிபிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் நுழையாத வண்ணம் முறையாக கண்காணிக்கப் பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக வெளியேவர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி வரும்போது கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்னென்ன நடைமுறைகள் உள்ளதோ அவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் இருப்பது ஆகியவற்றுக்காக மாவட்டம் முழுவதும் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) காளிதாஸ், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) ரமேஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணை யாளர் (கிழக்கு) செல்வம், மாநகராட்சி நகர் நல அதிகாரி ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story