முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்


முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 13 July 2020 4:30 AM IST (Updated: 13 July 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

தென்காசி. 

முழு ஊரடங்கையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஜூலைமாதம் 5, 12, 19, 26-ம் தேதி ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நெல்லை பேட்டையில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் வள்ளியூர், களக்காடு, பணகுடி, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மாதேவி, முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், மானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடிய சாலைகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இதேபோல் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. தடையை மீறி வெளியே வந்த ஒரு சில வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

Next Story