பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு நிலைப்பாட்டை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தல்
பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த நிலைப்பாட்டை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த நிலைப்பாட்டை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
பல்கலைக்கழக தேர்வு
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்தது. ஆனால் மாநில அரசின் இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று பல்கலைக்கழக வேந்தரும், மாநில கவர்னருமான பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது என மாநில அரசாங்கம் அதிரடியாக அறிவித்தது.
இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது.
மறுபரிசீலனை
இதன் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்த முடியாது என மராட்டிய அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
இந்தநிலையில், மும்பையில் உள்ள ராஜ்பவனில் 16 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், செய்திசேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கூறியதாவது:-
ராஜ்பவனுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்து இருக்கிறது. இது பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கவர்னரின் நிலைப்பாடு தவறு என்பதை காட்டுவதற்கான அறிகுறியாகும். எனவே கவர்னர் பல்கலைக்கழக தேர்வுகள் குறித்த தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போதைய சூழலில் மாணவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைக்கு ஆபத்து உள்ளதால் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story