போடி பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை
போடி மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக மழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாமரத்தில் அதிகளவு பூக்கள் பூக்கவில்லை.
போடி(மீனாட்சிபுரம்),
விவசாயிகளின் எதிரியான வெள்ளை நிற பூச்சிகள் மரத்தின் இலைகளையும், பூக்களையும் சேதப்படுத்திவிட்டன. இதனால் மாமரங்களில் மாங்காய்களின் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதால் மாங்காய் பறிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு சரியாக வரவில்லை. இதனால் மாங்காய்களை மரத்திலிருந்து பறிக்கமுடியாமல் மரத்திலேயே மாங்காய்கள் பழுத்து கீழே உதிர்ந்தன.
மேலும் விளைந்த மாங்காய்களை பறித்து விற்பனை செய்யும்போது உள்ளூர் வியாபாரிகள் தவிர, வெளி மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியை சேர்ந்த வியாபாரிகளுக்கு, லாரிகள் கிடைக்காததால் மாங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை.
இப்படி வேதனையான பல சூழ்நிலைகளில் இவ்வருடம் மாங்காய் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய விவசாயிகளிடம் குத்தகை எடுத்த மாங்காய் விவசாயிகள் தோட்ட உரிமையாளர்களுக்கும், மாமரத்திற்காக வாங்கிய பூச்சி மருந்து கடைகளுக்கும் பணம் கட்ட முடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். மேலும் மாங்காய் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story