வடகாடு-பாச்சலூர் இடையே சேதமடைந்த தார்சாலையால் விபத்து அபாயம்


வடகாடு-பாச்சலூர் இடையே சேதமடைந்த தார்சாலையால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 13 July 2020 6:34 AM IST (Updated: 13 July 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு பகுதியில் இருந்து பாச்சலூருக்கு மலைப்பாதை உள்ளது. இந்த பாதை வழியாக கே.சி.பட்டி, வத்தலக்குண்டு மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

சத்திரப்பட்டி,

வடகாடு மலைப்பாதையில் கானிங்காடு பிரிவு அருகே தார்சாலையில் பிளவு ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story