செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 July 2020 6:41 AM IST (Updated: 13 July 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி விட்டது. நேற்று மறைமலைநகர் விவேகானந்தர் நகர் பகுதியில் வசிக்கும் 36 வயது ஆண், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

மண்ணிவாக்கம் கோபால் நகரை சேர்ந்த 54 வயது ஆண், ஆனந்தபுரம் தெருவை சேர்ந்த 40 வயது ஆண், காரணைப்புதுச்சேரி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், கோகுலம் காலனி பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண், பெரியார் நகர் 13-வது தெருவில் வசிக்கும் 31 வயது இளம்பெண், ஊனமாஞ்சேரி சந்திராபுரம் பகுதியை சேர்ந்த 57 வயது, 49 வயது பெண்கள், ஊரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 25 வயது இளைஞர், பாரதி நகர் பகுதியில் வசிக்கும் 39 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,120 ஆக உயர்ந்தது. இவர்களில் 4,527 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 70 வயது, 64 வயது முதியவர்கள், 48 வயது ஆண், 31 வயது வாலிபர் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை தோப்பு தெருவைச் சேர்ந்த 37 வயது ஆண், பஜார் தெருவை சேர்ந்த 33 வயது வாலிபர், பள்ளிப்பட்டு ரோட்டை சேர்ந்த 25 வயது வாலிபர், பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காய்பேட்டை கிராமத்தில் 37 வயது ஆண், வெங்கடாபுரம் எல்லை அம்மன் கோயில் தெருவில் 35 வாலிபர், குமாரராஜுப்பேட்டை காலனியில் ராமர் கோவில் தெருவை சேர்ந்த 26 வயது வாலிபர், பள்ளிப்பட்டு பேரித் தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி, அம்மையார்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி, கொடிவலசை காலனியில் 40 வயது ஆண் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சியை சேர்ந்த தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவன ஊழியரான 23 வயது வாலிபர், அண்ணா தெருவில் வசித்து வரும் 35 வயது வாலிபர், பெரியபாளையம் பஜார் தெருவில் வசித்து வரும் 50 வயது ஆண் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 232 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 6,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,014 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 127 பேர் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள மேல் படப்பை பெரிய தெரு பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், ஆதனூர் ஊராட்சியில் ஏ.வி.எம். நகர் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர், சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த 34 வாலிபர், மாடம்பாக்கம் நீலமங்கலம் பகுதியில் உள்ள பெரியார் தெருவைச் சேர்ந்த 41 வயது ஆண், மாடம்பாக்கம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,606 ஆனது. இவர்களில் 1,322 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2,235 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் பலியானார்கள்.

Next Story