காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 13 July 2020 7:27 AM IST (Updated: 13 July 2020 7:27 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சண்முகபிரியா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

காஞ்சீபுரம்,

சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய சண்முகபிரியாவை, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அரசு நியமித்து உத்தரவிட்டது. அவர் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம். தமிழக அரசின் அறிவுரைப்படி பொதுமக்கள் கொரோனா பிடியில் இருந்து விடுபட முக கவசம், கையுறை அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவ வேண்டும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியாவை, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வரவேற்றனர்.

Next Story