நாகை மாவட்டத்தில் ராணுவ வீரர், டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா
நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 353 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் நாகை மாவட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 341 ஆக குறைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறையை சேர்ந்த 30 வயதுடைய ராணுவ வீரர் ஒருவர், தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் உள்பட 6 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 347 ஆக உள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 176 பேர் குணமடைந்துள்ளனர். 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story