போலீஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்ட சாவிகள் சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்


போலீஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்ட சாவிகள் சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்
x
தினத்தந்தி 13 July 2020 7:38 AM IST (Updated: 13 July 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரத்தில் தடையை மீறி சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க போலீஸ் நிலையத்திலிருந்து அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், வாகனங்களை திரும்ப பெற்று செல்கின்றனர். இந்நிலையில் சோழவரம் போலீஸ் நிலையத்தில் மூலையில் ஒரு இடத்தில் சாவிகள் குவிக்கப்பட்டுள்ளதையும், உரிமையாளர் ஒருவர் தன்னுடைய சாவியை தேடுவது போல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Next Story