விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
x
தினத்தந்தி 13 July 2020 11:54 AM IST (Updated: 13 July 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற விபத்துகளில் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி செய்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்த 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கும் விழா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, லட்சுமணன், விஸ்வநாதன், கவுசிக், அரவிந்த், குமார், பிரசாத், வினோத் குமார், அன்பு ஜாலியன், மாயகிருஷ்ணன் ஆகிய 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கி பேசுகையில், பொதுமக்கள் திடீரென்று ஒரு அசம்பாவித சம்பவங்களை கண்ணெதிரே காண நேர்ந்தாலும், கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை, விபத்து எதுவாக இருந்தாலும் உடனடியாக அவசர எண் 100-ஐ தொடர்பு கொள்ளவும் என்றார்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்மாறன் (அரியலூர்), முகமது இத்ரீஸ் (ஆண்டிமடம்), ராஜா (கயர்லாபாத்) மதிவாணன் (அரியலூர் சரக போக்குவரத்து பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், நந்தகுமார் (அரியலூர்), நெப்போலியன் (கயர்லாபாத்), இரும்புலிக்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வழங்கினார்.

Next Story