உடன்குடி, ஆறுமுகநேரி பகுதியில் 33 பேருக்கு கொரோனா சுகாதார பணிகள் தீவிரம்
உடன்குடி, ஆறுமுகநேரி பகுதியில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடன்குடி,
உடன்குடி, ஆறுமுகநேரி பகுதியில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
20 பேருக்கு கொரோனா
உடன்குடி பகுதியில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. உடன்குடியை அடுத்த வாகைவிளையில் வெளியூரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினரை பரிசோதனை செய்ததில், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதுதவிர உடன்குடி பெருமாள்புரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரின் மகனுக்கும், பஜாரில் சுவீட்ஸ் கடை நடத்தி வரும் ஒருவரின் மகனுக்கும், உடன்குடி கீழபஜாரில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கும், உடன்குடி பஜாரில் ஓட்டலில் வேலை பார்த்த புரோட்டா மாஸ்டருக்கும், முருகன் காலனியில் ஒருவருக்கும், செல்வா சிட்டியில் ஒரு பெண்ணுக்கும், செட்டியாபத்து அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஒரு பெண்ணுக்கும், சிவலூர் காலனியில் உள்ள மேள கலைஞர் மகனுக்கும், எள்ளுவிளையில் ஒரு ஆணுக்கும், பரமன்குறிச்சியில் ஒரு பெண்ணுக்கும், சியோன் நகரில் தாய், 2 மகன்களுக்கும், மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார துறையில் பணியாற்றி வரும் ஒருவருக்கும், குலசேகரன்பட்டினம் காவலர் குடியிருப்பில் சிறுவன் உள்பட 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பரிசோதனை
உடன்குடி பகுதியில் மொத்தம் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால், பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், டாக்டர் ஜெயபரணி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், கிராம சுகாதார செவிலியர் ஜெயராணி மற்றும் சுகாதார துறையினர் பெருமாள்புரம், சிவலூர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.
மேலும் உடன்குடி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாபு தூய்மை பணியாளர்களுடன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்தனர்.
ஆறுமுகநேரி-காயல்பட்டினம்
இதேபோல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாகுபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாகுபுரம் காலனியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ஆறுமுகநேரி காந்தி தெருவை சேர்ந்த ஆண், ராஜமன்யபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த 2 தொழிலாளர்கள், ராஜமன்யபுரம் தெருவை சேர்ந்த பெண் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் காயல்பட்டினம் சதுக்கை தெருவை சேர்ந்த 55 வயது ஆண், விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 43 வயது ஆண், எல்.ஆர்.நகரை சேர்ந்த 51 வயது ஆண், காயல்பட்டினம் எல்.எப்.ரோட்டை சேர்ந்த 25 வயது பெண், சிங்கித்துறையை சேர்ந்த 23 வயது பெண் உள்பட 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வடக்கு ஆத்தூர் ஆத்தங்கரை தெருவை சேர்ந்த 47 வயது ஆண், ஆத்தூர் எல்.எப். ரோட்டை சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதார பணிகள் தீவிரம்
ஆறுமுகநேரி பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ராஜீவ்காந்தி நகர், நாராயண சுவாமி கோவில் தெரு, ராஜமன்யபுரம், காந்தி தெரு ஆகிய பகுதிகளில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆனந்தன் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிளச்சிங் பவுடர் போடப்பட்டது.
இதேபோல் ஆத்தூர் பகுதியில் பேட்டை தெரு, ஆத்தங்கரை தெரு உள்ளிட்ட தெருக்களில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மணிமொழி செல்வன் ரங்கசாமி தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது சாகுபுரம் தொழிற்சாலை அதிகாரி அருணா உடன் இருந்தார்.
Related Tags :
Next Story