மாவட்ட செய்திகள்

தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம்வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம் + "||" + Romantic marriage of taluka panchayat chief and vice-president

தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம்வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்

தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம்வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்
கலபுரகி அருகே தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்
கலபுரகி, 

கலபுரகி அருகே தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். வெவ்வேறு கட்சியை சேர்ந்த இவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாலுகா பஞ்சாயத்து தலைவி- துணைத் தலைவர்

பொதுவாக ஒரு கட்சியை சேர்ந்த தலைவர்கள், மற்றொரு கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கலாம். அதில் சில அரசியல் கட்சி தலைவர்கள் விதிவிலக்காக மாற்று கட்சியினருடன் நட்பு பாராட்டுவதும் நடந்து வருகிறது. அதே வேளையில் இரு கட்சிகளின் தொண்டர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் வெவ்வேறு கட்சியை சேர்ந்த தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவரை காதலித்து திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

காதல் மலர்ந்தது

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ருக்மணி. இவர் பா.ஜனதாவை சேர்ந்தவர். அதுபோல் இதே தாலுகா பஞ்சாயத்து துணைத் தலைவராக இருப்பவர் பீமாசங்கர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் ஒரே தாலுகா பஞ்சாயத்தில் தலைவி, துணைத் தலைவராக இருப்பதால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதனால் இருவரும் காதல் வயப்பட்டார்கள்.

வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் இருவருக்கும் இடையே நட்பு இருந்தது. இது காதலாக மலர்ந்தது. இதுபற்றி அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் பச்சைக்கொடி காட்டினர்.

திருமணம் நடந்தது

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் ஜூலை 13-ந்தேதி (அதாவது நேற்று) திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.

அதன்படி அவர்கள் இருவருக்கும் அப்சல்புரா டவுனில் உள்ள ஜிதகா மடத்தில் வைத்து நேற்று எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தில் சுமார் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். வெவ்வேறு கட்சியில் பணியாற்றி வரும் ருக்மணியும், பீமாசங்கரும் காதலித்து திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் தங்களை இணைத்துக்கொண்டதால், அவர்கள் சார்ந்த கட்சியினரும் நேரில் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர். அதுபோல் தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கொரோனா பீதிக்கு மத்தியில் வெவ்வேறு கட்சியை சேர்ந்த தாலுகா பஞ்சாயத்து தலைவியும், துணைத்தலைவரும் காதலித்து இல்லற வாழ்க்கையில் இணைந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியமாகவும், ருசிகரமாகவும் விவாதிக்கப்பட்டது.