நகர பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் போலீசாருக்கு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு உபகரணம்
புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று தொடர்பான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பெரியகடை போலீஸ் நிலையத்தில் நடந்தது. சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா தலைமை தாங்கி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில் குமார், சஜித், ஜெய்சங்கர், வெற்றிவேல் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
உத்தரவு
அதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா பேசியதாவது:-
புதுவை நகர பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். யாராவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தாலோ, முக கவசம் அணியாமல் இருந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது அதிகாரிகள் 2 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கிழக்குப்பகுதி போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரியகடை, உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, ஒதியஞ்சாலை ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு ஓமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story