மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 23.43 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை


மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 23.43 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை
x
தினத்தந்தி 14 July 2020 4:20 AM IST (Updated: 14 July 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 23.43 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

மும்பை, 

ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 23.43 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

மும்பையில் மழை

மும்பையில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் மும்பை புறநகரில் 69.மி.மீ. மழையும், நகரில் 22.4 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

இதேபோல இந்த மாதத்தில் இதுவரை மும்பையில் 690.4 மி.மீ. மழை பெய்து உள்ளது. இது வழக்கமாக ஜூலை மாதம் மும்பையில் பெய்யும் மழை அளவில் 82 சதவீதம் ஆகும். இதேபோல மும்பையில் ஜூன் 1-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 1,085 மி.மீ. மழை பெய்து உள்ளது. இது மழைக்காலத்தின் போது மும்பையில் பெய்யும் சராசரி மழை அளவில் 47 சதவீதம் ஆகும்.

ஏரிகளின் நீர்மட்டம்

எனினும் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகளின் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் வைத்தா்னா, மோதக் சாகர், தான்சா, பட்சா, விகார், துல்சி ஆகிய ஏரிகளில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 67 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 23.43 சதவீதம் மட்டுமே.

வழக்கமாக இந்த நேரத்தில் ஏரிகளில் 40 முதல் 50 சதவீத தண்ணீர் இருப்பு இருக்கும். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 45.10 சதவீதமும், 2018-ம் ஆண்டு 46.82 சதவீதம் தண்ணீரும் ஏரிகளில் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 மில்லியன் லிட்டர் ஆகும்.

Next Story