தானேயில் கொரோனாவை கண்டறிய ஆன்டிஜென் பரிசோதனை மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்
தானே மாவட்டத்தில் கொரோனாவை கண்டறிய ஆன்டிஜென் பரிசோதனையை மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.
மும்பை,
தானே மாவட்டத்தில் கொரோனாவை கண்டறிய ஆன்டிஜென் பரிசோதனையை மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.
30 நிமிடத்தில் முடிவு
மராட்டியத்தில் தலைநகர் மும்பையை அடுத்து, தானே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதுவரை தானே மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தநிலையில், கொரோனா பரிசோதனை முடிவை 30 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் ஆன்டிஜென் பரிசோதனை திட்டத்தை நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரியான ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.
1 லட்சம் கருவிகள்
தானே மாநகராட்சி தலை மை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தானேயில் ‘மிஷன் ஜீரோ' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார்.தானேயில் கோரோனா பாதிப்பை கண்டறிய 1 லட்சம் ஆன்டிஜென் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா தெரிவித்தார்.
Related Tags :
Next Story