ஆம்பூரில் தீக்குளித்த வாலிபர் வீட்டிற்கு சென்று கலெக்டர் ஆறுதல் விசாரணை அதிகாரி நியமனம்
போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த முகிலன் (வயது 27) என்பவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆம்பூர்,
ஆம்பூரில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த முகிலன் (வயது 27) என்பவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை மூர்த்தி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் பத்மநாபன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மேலும் முகில் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக திருப்பத்தூர் மாவட்ட குற்றபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் நியமிக்கப்பட்டார். அவர் ஆம்பூரில் தீக்குளிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
முன்னதாக அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவின்பேரில் ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பாக ரூ.50 ஆயிரம் நிதி உதவியை நகர செயலாளர் எம்.மதியழகன் முகிலனின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story